districts

img

சோழிங்கநல்லூர் தொகுதியில் 21 அரசு மருத்துவமனைகள்

சென்னை, ஏப். 7 - சோழிங்கநல்லூர் தொகு தியில் 21 மருத்துவனைகள் அமைக்கப்பட்டுள்ளாக அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறினர். தென்சென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் ஞாயிறன்று (ஏப்.7) சோழிங் கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர், துரைப் பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங் கேணி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்த  வாக்கு சேகரிப்பில் திமுக  அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பேசியதாவது: இந்த பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங் கநல்லூர் தொகுதியில் 71  கோடி மதிப்பீட்டில் 262 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு 90 விழுக்காடு பணிகள் முடி வடைந்துள்ளது. மாநகராட் சிக்குட்பட்ட 20 வார்டுகளில்  12 இடங்களில் மருத்துவ மனைகள் கட்டி முடிக்கப் பட்டு திறக்கப்பட்டுள்ளது. 8 இடங்களில் மருத்துவமனை கள் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு மாநிலங் களுக்கு ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் இதை எதையும் தெரிந்து  கொள்ளாமல் பேசுகி றார். கிண்டி கலைஞர்  நூற்றாண்டு மருத்துவ மனையில் மருத்துவர்கள் இல்லை என்று குறை கூறி யுள்ளார். அந்த மருத்துவ மனை திறக்கப்பட்ட 6 மாதத்திற்குள்ளாக ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 139  பேர் சிகிச்சை பெற்றுள்ள னர். 37 ஆயிரத்து 338 பேர்  உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றதோடு, 1368  அறுவை சிகிச்சை நடந்துள் ளது. தமிழிசை சௌந்தர ராஜனை சொந்த செலவில் அழைத்து சென்று செய்த பணிகளை காட்ட தயாராக உள்ளோம். அவர் வரத் தயாரா? ஓஎம்ஆர் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி எடப்பாடியால் வந்தது  என்று அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறுகிறார். திமுக தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 1999ம் ஆண்டு டைடல் பார்க் கட்டப்பட்டது. அப்போது ஜெயவர்தனுக்கு 12 வயது. எடப்பாடி எங்கிருந்தான் என்றே யாருக்கும் தெரியாது. இந்த  டைடல் பார்க்தான் தகவல்  தொழில்நுட்ப நிறுவனங் களின் வளர்ச்சிக்கு அடி தளம். எனவே, மக்கள்  வளர்ச்சி திட்டங்கள் தடை யின்றி தொடர திமுகவிற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில் மேயர் ஆர்.பிரியா, சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், மண்டலக் குழு தலைவர் மதியழகன்,  சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப் பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் பி.ஜெய வேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.முகமது  ரஃபி, எம்.ஆர்.சுரேஷ் உள் ளிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.