districts

img

அகதிகளாக வாழ்கிறோம்: ஆட்சியரிடம் முறையிட்ட இருளர் குடும்பம்!

விழுப்புரம், செப்.20- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,வி.நல்லாளம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர்கள் திங்க ளன்று(செப்.20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், வி.நல்லாளம் கிராமத்தில் குடிசை யமைத்து பல ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. குடி தண்ணீருக்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள விவ சாய கிணற்றில் ஆபத்தான சூழலில் எடுத்து வரு கிறோம். ஆதார், குடும்ப அட்டை, நூறுநாள் வேலைத் திட்ட அட்டையும் வழங்கவில்லை. இதனால், அரசின் திட்டங்கள் ஏதுவும் கிடைக்காமல் அகதிகளாக வசித்து வருகிறோம்.  எனவே, எங்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும், தொகுப்பு வீடும் கட்டிக்கொடுக்க வேண்டும், மின்சாரம், குடிநீர் வசதியும் செய்து கொடுக்கவேண்டும், குடும்ப, ஆதார் அட்டையும் வழங்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

;