கிருஷ்ணகிரி, ஏப்.26- ஊத்தங்கரை வட்டம், கதவணி கிராமம் வழியாக மேட்டூரில் இருந்து வேலூா் மாவட்டத்திற்கு காவிரி நீா் செல்லும் குழாய் இணைப்பில் தண்ணீா் கசிந்து வெளியேறி வருகிறது. குடிநீர் கிடைக்காத நிலையில் கடந்த பல மாதங்க ளாக இந்தத் தண்ணீரை கதவணி, கரு மாண்டபதி, முத்தம்பட்டி, அருணபதி கிராம மக்கள் தங்கள் தினசரி தேவைகளுக்காக குடங்களில் எடுத்துச்சென்று பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் குடிநீர் திட்ட அதி காரிகள் நீர் கசியும் குழாய்களில் ஓட்டை அடைக்கும் பணிகளில் ஈடுபட்டனா். இந்த குடிநீரை நம்பியிருக்கும் பொதுமக்கள் வெயில் காலம் முடியும் வரை கசிவு நீரை அடைக்கும் பணியை கைவிடுமாறு கேட்டி ருந்தனர். ஆனால் புதிய குழாய்கள் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வேறு வழி இல்லாமல் ஊத்தங்கரை திருப்பத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்தங்கரை காவல் துறையினர்,வட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்த கிராமங்களின் மக்க ளுக்கு குடிநீருக்கு ஆவன செய்வதாக கூறியதையதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.