விழுப்புரம்,ஜன.2- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள், போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தப்படுத்துவது மற்றும் கண்காணிப்பு மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கி பேசுகையில்,“விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப் பில் ஈடுபட வேண்டும்” என்றார். போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தொடர் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி.அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) த முருகேசன், குற்றவியல் மேலாளர் வசந்தகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.