districts

img

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் விழா கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி,ஜூலை 15-

   கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 19 ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது.  

    மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கவும், புதிய பணி களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.  இதையொட்டி உலகங்காத்தான் பகுதியில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இந்த பணி களை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், ரிஷி வந்தியம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

    அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பயனாளிகள் அமர்வ தற்கான பந்தல் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு பணி கள், வாகனங்கள் வந்து செல்வதற்கான பணிகள், தற்காலிக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.