districts

img

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: ஜோதி பயணம் திருவண்ணாமலைக்கு வருகை

திருவண்ணாமலை,ஜன.14- கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி ஜோதி பயணம் ஞாயிறன்று  திரு வண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தது. கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாட்டில் உள்ள இளைஞர்க ளிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டு போட்டிகள் 17 மற்றும் 21 வயதிற்குட்டப்பட்ட பிரிவுகளை கொண்டு இருந்தது. ஆனால் 2021ம் ஆண்டில் ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில், 18 வயதிற்குட்பட்ட பிரி விலும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதே போன்று 2022 மத்தியப் பிரதேசத்திலும் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி கள் 2023,  தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்,  கேலோ இந்தியா விளை யாட்டுப் போட்டியினைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கேலோ இந்தியா இளைஞர் விளை யாட்டுப் போட்டிகள் - 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலத்தின் 4 முனை களில் இருந்து ஜோதி பயணம் புறப்பட்டு சென்னை சென்றடைகிறது.  அந்த ஜோதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்த போது அதனை  மாவட்ட ஆட்சியர் பெற்று, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பேரணியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, தடகள சங்க மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் ஜோதிபயண வரவேற்பு நிகழ்ச்சியில் மேலும், தேசிய அளவிலான போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டிகள் ஜனவரி 10, 11 தேதிகளில்  வரை பள்ளி மற்றும் கல்லூரியில் நடை பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு,  ஞாயிறன்று  மாவட்ட ஆட்சியர் ,  நாடாளுமன்ற உறுப்பினர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரமுகர்களின் தலைமை யில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.