அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் ஞாயிறன்று (ஏப். 14) மேல்விஷாரம் நகரத்தில் வாக்கு சேகரித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர். காந்தி, சிபிஎம் மாவட்ட செயலாளர் என். காசிநாதன், வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், பேராசிரியர் காதர்மொய்தீன் (முஸ்லிம் லீக்) , நகர மன்ற தலைவர் அமின், தொழிலதிபர் சௌகார்முன்னாபாய், பி.ஆர்.சி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.