அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரிய நகரம், இஸ்லாம் நகர், கிருஷ்ண சமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் தீவிரமாக வாக்குசேகரித்தார். திமுக மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் மற்றும் முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.பூபதி, மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் சார்பில் வட்ட செயலாளர் அந்தோணி, வட்டக்குழு உறுப்பினர்கள் பாலாஜி, கரிமுல்லா, செல்வி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.