districts

ஐக்யூஓஓ இசட்7 புரோ 5ஜி விற்பனை ஆக. 31 துவக்கம்

சென்னை, ஆக.17–

      ஐக்யூஓஓ நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் வாடிக்கை யாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

     அவற்றில் ஐக்யூஓஓ நியோ 7 புரோ மற்றும் ஐக்யூஓஓ இசட்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய நாட்களிலேயே அனைத்தும் விற்பனையாகிவிட்டது. அந்த வகையில் தற்போது தனது வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வேகமான மற்றும் சிறந்த செயல்திறன் அனுபவத்தை வழங்க ஐக்யூஓஓ இசட்7 புரோ 5ஜி விற்பனை ஆகஸ்ட் 31–ந்தேதி முதல் Amazon.in–ல் துவங்க உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நிகரற்ற ஆற்றல், அற்புதமான வடிவமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது  என்று அந் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.