districts

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 7 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை,ஏப்.2- சென்னை சேப்பாக்கம் மைதா னத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போட்டி நடைபெறும் 7 நாட்கள் சென்னை யில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திங்களன்று‘ (ஏப்.3), வருகிற 12-ந்தேதி, 21-ந்தேதி, மே 10-ந்தேதி, மே 14-ந்தேதி ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை யும், வருகிற 30-ந்தேதி மற்றும் மே 6-ந்தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் போக்கு  வரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு) சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.  பெல்ஸ்சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை - பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்று அடைய லாம். பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.  அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜா சாலை வரும் எம்.பி.டி.டபிள்யூ. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காம ராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

இதை யும் படியுங்கள்: சென்னை-கோவை ரெயில் உள்பட 4 வந்தே பாரத்  ரயில்கள் இந்த மாதத்தில் இயக்கப் படுகிறது வாலாஜாசாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணா சாலை யில் இருந்து அண்ணா சிலை வழி யாக வாலாஜா சாலை வரும் பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டை கள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம். காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் எம்.பி.டி.டபிள்யூ. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம். போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாக னங்கள் பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலை யில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. அனுமதி அட்டை இல்லாத வாக னங்கள் அண்ணா சாலையில் இருந்து அண்ணா சிலை வழியாக வாலாஜாசாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம்  எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.  போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி.எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழி யாக பி.டபிள்யூ.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.