districts

img

அரக்கோணத்தில் எஸ்.ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம்

திருவள்ளூர், மார்ச் 24- அரக்கோணம் மக்க ளவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் ஞாயிறன்று (மார்ச்  24), திருத்தணியில்  கைத்தறி  மற்றும் துணி நூல் துறை  அமைச்சர் ஆர்.காந்தி தலை மையில் நடைபெற்றது.  இதில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் வரவேற்றார். திமுக தலைமை செயற்குழு  உறுப்பினர் பூபதி உட்பட  பலர் பேசினர். அரக்கோணம்  மக்களவைத் தொகுதி  வேட்பாளர் முனைவர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் கைத்தறி ஆடையை அணி வித்து வாழ்த்து தெரிவித் தார்.  இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சி.பெருமாள், வட்ட செயலா ளர் வி.அந்தோணி,   மாவட்ட  குழு உறுப்பினர் ஏ.அப்சல்  அகமது, வட்ட குழு உறுப் பினர்கள் கரிமுல்லா, ஜெய வேல், பிருந்தாவனம் கணேசன், கிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்றனர்.