districts

img

மை லேடிஸ் பூங்காவை பராமரிக்க வலியுறுத்தி

நேரு விளையாட்டு அரங்கத்திற்கு அருகே உள்ள மை லேடிஸ் பூங்கா பராமரிப்பு இன்றி தொற்று நோய் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பூங்காவை சீரமைத்து பராமரிக்க கோரி ஞாயிறன்று (ஆக.26) பூங்கா வாயிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சங்கத்தின் சூளை கிளை நிர்வாகிகள் தீபன், சவுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை எழும்பூர் பகுதிச் செயலாளர் ஜெ. பார்த்திபன் தொடங்கி வைத்தார்.