2024 மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெறும் 10, +1 மற்றும் +2 பொதுத் தேர்வுகளுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 23-இல் தொடங்கி 29-இல் நிறைவடையும். அதை தொடர்ந்து அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 26-இல் தொடங்கி ஏப். 8-ஆம் தேதி நிறைவடையும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 10-இல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
+1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப். 19-இல் தொடங்கி பிப். 24-ஆம் தேதி வரை நடைபெறும். அதை தொடர்ந்து எழுத்துத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் மே 14-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
+2 செய்முறைத் தேர்வு பிப். 12 முதல் பிப்.17 வரை நடைபெறும். அதை தொடர்ந்து மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி நிறைவடையும். மே 6-இல் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்குத் தனித்தேர்வர்கள் டிச. 27 முதல் ஜன. 10 வரை சேவை மையங்களில் இணையம் வழியே விண்ணப்பிக்கலாம்.
தக்கல் முறையில், ஜன. 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்புக் கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.