விழுப்புரம், ஆக.16-
மதவெறி, சாதிவெறி சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க, இருள் சூழ்ந்த நாட்டின் விடியலை நோக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின கலை விழா விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.முத்துக் குமரன் தலைமை தாங்கி னார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வேல்மாறன் மற்றும் பலர் உரையாற்றினர்.
ஆர்.தாண்டவராயன், பி.சிவராமன், ஆர் டி.முரு கன் (விவசாயிகள் சங்கம்), ஆர்.மூர்த்தி, வி.பால கிருஷ்ணன் (சிஐடியு), வி.அர்ச்சுனன் (விவசாய தொழிலாளர் சங்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.