districts

விடுதலை’ நாளிதழ் 89ஆம் ஆண்டு தொடக்க விழா

சென்னை.மே 31 ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் ‘விடுதலை’ 89ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை (ஜூன்1) மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது.  குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு ஏடுகளை நடத்திய தந்தை பெரியார் 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘விடுதலை’யை நாளிதழ் வடிவில் வெளியிட்டு வந்தார்.  விடுதலையில் வெளியான தந்தை பெரியார் கருத்துகளின் கருத்துக் கருவூலமாக, கருத்துப்பெட்டகமாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முயற்சியில் விடுதலை களஞ்சியமாக தொகுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதி இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.  விடுதலை ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில்  தி.க துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றுகிறார். விழாவில் திமுக செய்தி தொடர்புக்குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்,  பங்கேற்று வாழ்த்துரை ஆற்றுகிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் விடுதலை களஞ்சியம் முதல் தொகுதியை வெளியியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி   நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி நூலின் நன்கொடை மதிப்பு ரூ.500. விழாவையொட்டி ரூ.400க்கு வழங்கப்படுகின்றது.

;