districts

சென்னையில் 3 லட்சத்து 73 ஆயிரம் விண்ணப்பங்கள்

சென்னை,ஜூலை 30-

    குடும்பத் தலைவி களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம்கள் மூன்று கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில், முதல் கட்டமாக 704 நியாய விலைக் கடைகளுக்கு 24 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையில், இரண்டாம் கட்டமாக 724 நியாய விலைக் கடை களுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையில், மூன்றாம் கட்டமாக விடு பட்டவர்களுக்கு அடுத்த மாதம் 17 ஆம் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் சனிக்கிழமை வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.