districts

குப்பையை தரம்பிரித்து அளித்தால் டிவி, வாஷிங்மெஷின், பிரிட்ஜ் பரிசு

சென்னை, ஜூலை 9- சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பை தரம்  பிரிக்கும் போட்டி  நடை பெற்றது.  இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர்  பிரியா கலந்துகொண்டு “என்  குப்பை எனது பொறுப்பு’’ என்கின்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். பின்னர் மேயர் பிரியா தனது  வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்  பிரித்த தனது புகைப்   படங்களை இந்த போட்டி யின் இணையதள செயலி யில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.  இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. இந்த குப்பை தரம் பிரித்து தரும் போட்டியில் பொதுமக்களும் கலந்து கொண்டு வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என  இரண்டு கூடைகளில் பிரித்துக் கொடுத்து அதை  படம் பிடித்து பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வெளி யிட்டு 8925800864 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தாலோ அதே எண்ணில் வாட்ஸ் அப்பில் பதிவிட்டாலோ முதல் 3 பேருக்கு டி.வி. வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். எனவே “என் குப்பை எனது  பொறுப்பு” என்ற இந்த  திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.  இதில் மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், கவுன்சிலர்கள் தீர்த்தி, காசிநாதன், நந்தினி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல  உதவி ஆணையர் கோவிந்த ராஜ் உட்பட தூய்மைப் பணியாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

;