புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடற்கரை காந்தி சிலை எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றம் துவக்க நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சாய் சரவணன் குமார், உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.