districts

img

வரதட்சணையால் இளம் பெண் கொலை

கிருஷ்ணகிரி, அக்.6- கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகில் உள்ள கொப்பக்கரை ஊராட்சி கல்லுக்கான் கொட்டாய் கிராமத்தில் சுலோச்சனா என்பவர் வாழ்ந்து வருகிறார். கூலி வேலை செய்து  மகள் ரோஜா,மகன் ஜெயப் பிரகாஷ் ஆகியேரை அவர் வளர்த்து வந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா இதே கிராமத்தில் வசிக்கும் உறவினர் மகன் பெருமாளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் ரோஜாவை அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை தொல்லை, விஷம் கொடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் ரோஜா இறந்தார். இது குறித்த செய்தி தீக்கதிரில் வெளியானது.  இதையடுத்து, ஓசூர் சாராட்சியர் சரண்யா, விசாரணை நடத்தினார். நடந்த சம்பவங்களை விளக்கிய ரோஜாவின் உற வினர்கள், ஏற்கெனவே பதிவு செய்த பிரிவு 302 வழக்கை  கொலை வழக்காக (307) மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.  இந்த கோரிக்கையை ஏற்ற சாராட்சியர், ரோஜாவின் கணவர் உட்பட மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.  ரோஜாவின் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று சாராட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன்,கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் ராஜா, ஓசூர் மாநகர செயலாளர் சி.பி. ஜெயராமன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.