கிருஷ்ணகிரி,ஜன.20- ஓசூர் அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவம னையாக தரம் உயர்த்தி தமிழ்நாடுஅரசு அறிவித்தது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு ரூ. 100 கோடியில் கட்டுமானப் பணிகள் மேற் கொள்ளப்படும் என்று மாநில அரசால் அறிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ஓசூர் வட்டத்தில் உள்ள அச்செட்டிப்பள்ளி ஊராட்சி மன்றம் அகரம் கிராமத்தில் ராயக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் இந்த மருத்துவமனை பெயர் பலகையை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வகுமார், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா,துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையர் சினேகா, சாராட்சியர் பிரியங்கா, அச்செட்டிப்பள்ளி ஊராட்சி தலைவர் சீனிவாச ரெட்டி கலந்து கொண்டனர்.