districts

img

தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

சென்னை, அக். 29- திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா பள்ளியும், திரு வொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கம் இணைந்து துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் ஜே.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவி தேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள்  கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட லயன் சங்க துணை கவர்னர் ஏ.டி.ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ஜி.வரதராஜன், என்.துரைராஜ் பி.பிரதாப்குமார், பி.வி.சுப்பிரமணி, ஏ.ஞானசேகர், சி.முருகன், எம்.ராபின், எஸ்.டி.சங்கர், பள்ளி முதல்வர் மலர்விழி, நிர்வாகிகள் அரிகரன், அவந்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.