பணி நீக்க காலத்தை பணி காலமாக வகைப்படுத்தி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டியும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாழை கன்றுகளை நட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நடராஜ், தலைவர் சந்திரன், சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் திம்ம ராஜ், தலைவர் தேவன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.