சிதம்பரம், மே 10- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக கழகத்தை நிறுவிய முத்தையாவேல் ஆய்வரங்க நிறைவு விழா துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமையில் நடை பெற்றது. தமிழியல் துறைத் தலைவர் அரங்க.பாரி வரவேற்றார். தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார் இருவரும் தமிழை வளர்க்க அரும்பாடுபட்டனர்”என்றார்.