districts

அதிக செயல்திறன்கொண்ட ஸ்மார்ட்போன் பிப்.22 அறிமுகம்

  சென்னை, பிப்.4-  உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனத்தின் நியோ 7 புரோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நுகர்வோரால் மிகவும் விரும்பப்பட்ட ஸ்மார்ட்போனாக இருந்தது.  இதன் சிறப்பான செயல்திறன், வடிவமைப்பு மற்றும் கேமரா ஆகியவற்றின் அடிப்படையில் தனித்து விளங்கியது. மேலும் அமேசான்.இன் தளத்தில் இந்த விலைப் பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனாக இடம் பிடித்தது. அதற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து புதுமை மற்றும் சக்திவாய்ந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஐக்யூஓஓ நிறுவனம் தற்போது அதே வரிசையில் நியோ 9 புரோ என்னும் ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஒப்பிடமுடியாத செயல்திறன், கண்கவர் வடிவமைப்பு மற்றும் உயர்திறன் கொண்ட கேமராக்கள் ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.