விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தினால் உயிரிழந்தால் அல்லது நிரந்த ஊனம் ஏற்பட்டால் அம்மாணவர்களின் மேற்படிப்புக்கு தேவையான நிதியுதவி ரூ.75,000க்கான வைப்புப் பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் சி. பழனி சனிக்கிழமையன்று வழங்கினார். திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கௌசர், செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.