districts

img

அக்னிபாத் போராட்டம் எதிரொலி சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னை, ஜூன் 19- ஒன்றிய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும போராட்டம் வெடித்துள்ளது. இளைஞர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதேபோல், தமிழகத்தில் அக்னிபாதி திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகம் அருகே அரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இளைஞர்கள் மெரினாவில் கூடி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மெரினா, தலைமைச் செயலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு போட்டுள்ளனர். மேலும், நேப்பியார் பாலத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அருகே உள்ள பாலம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், கொடிமரம் இல்லம் சாலையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.