districts

img

விஐடியில் கிராவிடாஸ் திருவிழா நிறைவு

வேலூர், செப்.25 -  விஐடி பல்கலைக்கழ கத்தில் (கிராவிடாஸ்-2023) அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா செப் 22-24 மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் 13 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட னர். 150-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது. நிறைவு நாளில் நடை பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கினர். இந்த விழாவிற்கு விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்தார். கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கணேஷ் அறிக்கை வாசித்தார். ஒன்றிய அரசின் அறிவி யல் மற்றும் தொழில் நுட்பத் துறை விஞ்ஞானி எஸ்.கே. வர்ஷ்னே போட்டி களில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கினார். எச்பி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை இந்திய பிரிவின் தலைவர் மனோஜ் கிருஷ்ணா சுசீலா, பல்கலைக்கழக துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெய பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.