சென்னை,ஜூலை 27-
சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.44,640-க்கு விற்பனை செய்யப் படுகிறது. தற்போது பெண்கள் தங்கத்தை நகையாக வாங்காமல் தங்க வில்லைகள் மற்றும் பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது. இது ஒருப்பக்கம் முதலீடாக இருந்தாலும் திருமணத்தின் போது லேட்டஸ்ட் டிசைனில் நகை வாங்க இந்த யுக்தி பயன்படுவதாக கூறப்படுகிறது.