districts

img

ஐவிடிபி நிறுவனம் தங்க நாணயம், பரிசுகள் வழங்கியது

கிருஷ்ணகிரி, செப்.17- கிருஷ்ணகிரி மாவட்டம், ஒன்னல்வாடி செயின்ட் அகஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இந்த விழாவில் ஐவிடிபி  நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் கலந்து கொண்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில், அயராது உழைக்கும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில், 60 ஆசிரியர்களுக்கு பிளாஸ்க்குகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700 மதிப்புள்ள பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.  இதே போல், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 60 ஆசிரியர்களுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான ஸ்டோரேஜ் பாக்ஸ், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகளை 100 விழுக்காடு மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5,630 மதிப்பிலான தங்க நாணயங்கள், கிருஷ்ணகிரி ஆர்.சி.பாத்திமா ஆண்கள் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 55 ஆசிரியர்களுக்கு தலா ரூ.895 மதிப்பிலான பிளாஸ்க்குகள் என மொத்தம் ரூ.3.72 லட்சம் மதிப்பிலான பரிசு மற்றும் தங்க நாணயங்கள் வழங்கி வாழ்த்தினார்.