தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயிலும் 640 மாணவிகளுக்கும், முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 100 மாணவிகளுக்கு ரூ 5,14,300 மதிப்பிலான இலவச சீருடைகள் கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கீதா நன்றி கூறினார்.
அரசு போக்குவரத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் தலைமையகம் முன்பு வியாழனன்று (நவ.23) நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சிஐடியு மாநில பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் உரையாற்றினார்.