districts

தகுதியற்ற இடத்தில் வாழ நிர்பந்திப்பதா? கட்டணமின்றி குடியிருப்புகள் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, டிச. 28 - கண்ணப்பர் திடல் அருகே வாழ தகுதி யற்ற இடத்தில் நிர்பந்திக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக கட்டணமின்றி தரமான குடியிருப்புகளை வழங்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எழும்பூர் தொகுதி, 58வது வட்டம் ரிப்பன் மாளிகை அருகாமையில் உள்ள சைடாமஸ் சாலை ஓரத்தில் வசித்து வந்த 64 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். 20 வருடங்களுக்கு முன்பாக அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, அந்த குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற கண்ணப்பர் திடல் அருகே ஒரு கட்டிடத்தில் தங்க வைத்தனர். இந்த குடும்பங்களுக்கு மாற்று குடி யிருப்பு உடனடியாக வழங்கப்படும் என அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அடுத்தடுத்து ஆட்சிகள் மாறிய போதும் குடியிருப்புகள் கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளாக வாழ தகுதியற்ற பழு தடைந்த ஒரு கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாய மானது? குழந்தைகள், முதியவர்கள், கணவனை இழந்த இளம் பெண்கள் என பெரும்பகுதி தலித் சமூகத்தைச் சார்ந்த அந்த மக்களுக்கு கண்ணியமான வாழ்விட உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்யாதது கடும் கண்டனத்திற்குரியது. தற்போது, புதிய குடியிருப்புக்கு 5.50 லட்சம் ரூபாய் பணம் கேட்பதும், அதை தனி யார் நிதி நிறுவனத்திடமிருந்து வட்டிக்கு வாங்கி கட்ட மாநகராட்சி நிர்பந்திப்பது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் நேரடியாக இப்பகுதியை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட மக்களுக்கு கட்டணமின்றி, அருகாமையில் தரமான குடியிருப்புகளை உத்தரவாதம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;