வேலூர், ஜூலை 26- விஐடியில் 2023 ஆம் கல்வியாண்டின் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 12 ஆம் தேதி துவங்கியது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சர்வதேச பெரு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி, ஏர்பிஎன்பி மீடியா நெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்க பங்கு பெற்றன. விஐடி வேலூர், சென்னை, அமரா வதி (ஆந்திர பிரதேசம்) மற்றும் போபால் (மத்திய பிரதேசம்) மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒருங்கி ணைந்து செயல்பட்டன. இதில் வேலை வாய்ப்புக்கான முதல் கட்டமாக நிறுவனத் தைப் பற்றிய தகவல்கள், வேலைக்குத் தேவைப்படும் திறன்கள், மாணவர்களுக்கு தேவையான மனிதவளப் பயிற்சி நேரடியாகவும், இணையம் மூலமாகவும் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முதற்கட்ட தேர்வு முடிவுகளை விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் வெளியிட்டார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 45 மாணவர் களை தேர்வு செய்துள்ளது. அதேபோல் டி.இ.ஷா, மோர்கன் ஸ்டான்லி, ஏர் பி.என்.பி. மீடியா.நெட் ஆகிய நிறுவனங்களும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கின. மோட்டார் க்யூ என்ற நிறுவனம் அமித் அகர்வால், ஷ்ரதக் பரத்வாஜ் ஆகிய 2 மாண வர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 2 லட்சம் ஆண்டு சம்பளத்திற்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும், ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் உள்ள வேலை வாய்ப்புகள் 175 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக அமேசான், டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட், வால்மார்ட் லேப்ஸ் போன்ற நிறுவனங்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற உள்ளன. இதேபோல் ஷெல், ஆரக்கள், பிலிப்கார்ட், மேக் மை ட்ரிப்,நீல்சன் சாப்ட் லேப்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக அமேசான் நிறுவனம் விஐடி மாணவர்கள் 110 பேருக்கு தொழில் பயிற்சி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.