கடலூர், ஆக.14-
நெய்வேலி நகரில் அறிவியலுக்கான இந்தியா நடை பயணம் அறிவியல் சொசைட்டி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தியது.
இந்திய அரசின் 51ஏ சட்டத்தின் படி அறிவியலுக்கான ஆராய்ச்சியில் அதிக நிதி ஒதுக்கவும், அறிவியலுக்கு முன்னுரிமை வழங்கவும், அறிவியலுக்கு புறம்பான செய்தி களை தடுக்கவும் வலியுறுத்தி மெயின் பஜார் வீதிகளில் நடை பயணம் மேற்கொள்ளப்பட்டு காமராஜ் சிலை அருகே பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் துளிர் இல்லம் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் தனகேசவ மூர்த்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எஸ்.பாலகுருநாதன், மாவட்ட செயலாளர் ஆர்.தாமோதரன், மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீஃபன் நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அறிவியல் சொசைட்டி மாநில தலைவர் எம்.பி.கணேசன் நோக்கங்களை விளக்கி பேசினார்.இறுதியில் லோகநாதன் நன்றி கூறினார்.