சென்னை, ஏப். 3 - ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திருவொற்றியூரில் கடைகள், வீடுகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்வே கேட்டில் 30 கோடி ரூபாய் செலவில் ரயில்வேதுறை சுரங்க ப்பாதை அமைக்க உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள வீடுகள், சாலை யோர கடைகளை இடிக்க 117 வீடுகள், கடைகளுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழ மையன்று (ஏப்.2) அதிகாரிகள் வீடு களை அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றிடம் வழங்க வும் கோரி மக்கள் போராட்டம் நடத்தி னர். சுரங்கப்பாதை பணிக்கு தேவை யான இடங்களை மட்டும் கால அவ காசம் கொடுத்து இடிக்க வேண்டும். பிற பகுதிகளை அகற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரினர். திமுக மண்டல தலைவர் தி.மு. தனியரசு, மார்க்சிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாமன்ற உறுப்பி னர்கள் ஆர்.ஜெயராமன் (4வது வார்டு), கார்த்திக் (7வது வார்டு), நகரத் தலைவர் அரவிந்த் ஆறுமுகம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதிக்கப் படும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க மக்களவை உறுப்பினர் கலாதிதி வீரா சாமி, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகளிடம் பேசியுள்ளார். மாற்று இடம் ஏற்பாடு செய்யும் வரை வீடு களை இடிக்க கூடாதென்று என்று வலி யுறுத்தினர். இதனையடுத்து குடியி ருப்புகளை அகற்றும் பணியை அதி காரிகள் கைவிட்டனர். “ரயில்வே நிலத்தில் குடியி ருப்போருக்கு மாற்று இடம் கேட்டு ரயில் வேத்துறை அமைச்சரை நேரில் சந்தி த்து வீராசாமி எம்.பி., மனு அளித்துள் ளர். இந்த நிலையில், சுரங்கப் பாதை பணிக்கு தேவைப்படும் இடங்க ளில் உள்ள கடைகளை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.