districts

மாதாந்திர பரிசோதனைக்காக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஜூலை 3-

     தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக் காக திங்களன்று (ஜூலை 3) சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார்.  

    முதல்வர் ஸ்டாலினுக்கு இரைப்பை குடல் சம்பந்தமான சோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளதாக கூறப்படு கிறது. இந்தச் சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்த பிறகு முதல்வர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி யுள்ளது.  

    இதனிடையே, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் முடிந்து செவ்வயான்று (ஜூலை 4) வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.