districts

காபி பிரியர்களுக்கான சாக்லெட் அறிமுகம்

சென்னை,ஆக. 3-

       சாக்லேட், பிஸ்கெட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் லோட்டே இந்தியா காஃபி பைட் ரிச் சாக்லேட் என்ற புதிய சாக்லெட்டை  அறிமுகம் செய்துள்ளது.

       காபி மற்றும் கிரீமி வெண்ணிலா உடன், முழுமையான காபி சுவை அனுபவத்தை இதை சாப்பிடுபவர்களுக்கு வழங்குகிறது என்று  லோட்டே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிலன் வாஹி கூறுகிறார்.

       நுகர்வோரின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய  சாக்லேட்டிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்  என்று நாங்கள் நம்புவதோடு, எங்களின் வருவாயும் அதிகரிக் கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.