சென்னை, ஜன 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிக் குழு உறுப்பினர் எஸ்.பாரதிராணியின் தந்தை சி.இ.சிவதாஸ் சனிக்கிழமையன்று (ஜன.6) காலமானார். அவருக்கு வயது 69. வேளச்சேரி, பவானி நகரில் உள்ள இல்லத்தில் வைக்க ப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் ஞாயிறன்று (ஜன.7) வேளச்சேரி மயா னத்தில் தகனம் செய்யப்பட்டது.