districts

img

க.செல்வத்தை ஆதரித்து விவசாயிகள் பிரச்சாரம்

 காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து உத்திரமேரூர் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஈஞ்சம்பாக்கம், மேட்டூர், வேலியூர், ஊவோரிசத்திரம், புத்தேரி, கம்மாராபாளையம், வரதாபுரம், கொட்டிவாக்கம், பரந்தூர், சிறுவாக்கம், காரை, வேடல், இலுப்பப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கே.நேரு, என். சாரங்கன், வி. சுகுமார், என். நந்த கோபால், கே.செல்வம் ஜி.வசந்தா, எம்.ஜோதி, ஆனந்த வேல் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.