districts

img

விளை பொருட்களை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, செப்.11- சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம்  கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து  காய்கறிகள், பழங்கள், சிறுதானி யங்களை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியாக மூன்று போகம் விளையும் 3200 ஏக்கர் பூமியை தரிசு நிலம் என  தவறாக வகைப்படுத்தியுள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு 9  கிராமங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பு  செய்யாறு சிப்காட் அலுவல கத்திற்கு மனு கொடுக்க நடைபயண மாக செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக் கும் விவசாயிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் மூன்று  விவசாயிகள் படுகாயம் அடைந்த னர். அப்போது  300 க்கும் மேற்பட்ட  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று 9 கிரா மங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 70  நாட்களாக பந்தல் அமைத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், விவசாயத்தையும், விவசாயி களையும் பாதுகாக்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயி கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மேலும் மனுக் களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தால் ஆவேசமடைந்த விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீழே கொட்டியும், கோரிக்கை  மனுக்களை கிழித்து எரிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.