districts

சென்னையில் முக்கிய சாலைகள் விரிவாக்கம்

சென்னை, ஜன.6-  சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அந்த பகுதியில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்டமிட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் 3 கி.மீட்டர் தூர முள்ள சர்தார் படேல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த சாலை 20 மீட்டரில் இருந்து 30.5 மீட்டர் வரை அகலப்படுத்தப்படும். எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் ரோடு, கிரிம்ஸ் ரோடு, நியூ ஆவடி ரோடு மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 6 சாலைகள் அகலப் படுத்தப்பட உள்ளன. இந்த சாலைகளை குறைந்த பட்சம் 18 மீட்டர் வரை விரிவுபடுத்த சி.எம்.டி.ஏ.  திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அடை யாறு எல்.பி.ரோடு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, ஹண்டர்ஸ் ரோடு ஆகியவை அகலப்படுத்தும் திட்டத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் கூறிய தாவது:- சர்தார் படேல் சாலை விரிவாக்கத்திற்கான நிலம் தனியாரிடம் எடுக்க விரைவில் இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணி திங்கட்கிழமை முடியும். எத்திராஜ் சாலை விரிவாக்க ஆய்வு பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சாலை பாந்தியன் ரோடு ஜங்சன் மற்றும் எழும்பூர் கூவம் வரை 18 மீட்டர் அக லத்திற்கு விரிவு படுத்தப்படு கிறது.  இதே போல கிரிம்ஸ் சாலையில்  இருந்து பாந்தி யன் ரோடு, அண்ணா சாலை வரை 18 மீட்டர் அக லத்திற்கு விரிவு படுத்தப்படு கிறது. அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல் கட்டமாக 7 சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன.    ஈ.வே.ரா.பெரியார் சாலை யில் இருந்து நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம் குடிநீர் திட்டப்பணி வரை 18 மீட்டர் அகலமும், திருவள்ளூர் ரோடு சந்திப்பில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வரை 18 மீட்டர் அகல மும் விரிவாக்கம் செய்யப் படுகிறது. அடையாறு எல்.பி. ரோடு 30.5 மீட்டர் அகலத்துக்கு விரிவு படுத்தப்படுகிறது.