districts

img

வியட்நாம் கலாச்சார குழுவினருக்கு புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு

புதுச்சேரி, டிச.4- வியட்நாம் சோசலிச குடியரசின் நாடாளுமன்ற  முன்னாள் உறுப்பினர் ஹ மின் ஹியு தலைமையிலான கலாச்சார நட்புறவு  குழுவினருக்கு புதுச்சேரியில் தப்பாட்ட கலைஞர்களின் நடனத்துடன்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுச்சேரி பிள்ளை தோட்டம் பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம்,மூத்த தலைவர் சுதா சுந்தரராமன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன்,கலியமூர்த்தி,நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் புதுச்சேரி நிர்வாகிகள் சார்பில் வியட்நாம் குழுவினருக்கு மலர் மாலையிட்டு   வரவேற்றனர்.பின்னர் கலைஞர்களை அங்கிருந்து ஊர்வலமாக  தப்பாட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சியோடு   ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.  புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த வியட்நாம் நட்புறவு குழுவினர் பங்கேற்கும்  வகையில் அகில இந்திய சமாதான ஒருமை பாட்டு கழகத்தின் சார்பில்  கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.