திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கம் ரயில் நிலையம் சாலை (மேற்கு), எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகளுடன் கூடிய சென்னை தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை (செப். 30) திறந்து வைத்தார்.மேயர் ஆர்.பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர் (திருவொற்றியூர்), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), துணை மேயர் மு.மகேஷ் குமார், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் போ.தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.