புதுச்சேரி,டிச.12- மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை ரூ.1000 ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு, சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா செவ்வாய்க்கிழமை (டிச. 12) நடை பெற்றது. இவ்விழாவிற்கு சமூக நலத்துறை இயக்குநர் குமரன் தலைமை தாங்கினார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் களை வழங்கினார். அப்போது உரையாற்றிய முதல்வர், “அரசின் திட்டங்கள் விரைவாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வரு கிறோம்” என்றார். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டபடி மாற்றுத்திறனாளி களுக்கான உதவித் தொகை ரூ.1000 வருகிற ஜனவரியில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். இந்த விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் சு. செல்வம், வேளாண் மற்றும் சமூக நல அமைச்சர் க.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பி னர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.