districts

img

தொழிலாளியின் வயிற்றில் அடிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்

திருவள்ளூர், ஜன 18- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையின்  கீழ் பணி புரியும் தூய்மை பணியாளர், பம்ப் ஆப்ரேட்டர், டி எம் சி பணியாளர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி  திருவள்ளூர் மாவட்டத்தில் ஜனவரியில் கடந்த 10 நாட்களாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது ‌‌. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு), மாநில மாநாடு மீஞ்சூரில் பிப்ரவரி  16 -17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சங்கத்தில் பணியாற்றி வரும் தூய்மை காவலர், தூய்மை பணியாளர், பம்பு ஆப்ரேட்டர்கள், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் என  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் மிகவும் குறைந்த ஊதியத்தில்  பணியாற்றி வருகின்றனர். கோரிக்கைகள் இந்த தொழிலை நம்பி அடித்தட்டு மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், தூய்மை  பணியை தனியாருக்கு தாரை வார்க்கும், தொழிலாளியின் வயிற்றில் அடிக்கும் அரசாணைகள் 10, 152, 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்,  குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும், பணிக்கொடை ஓய்வூதியம் வாரிசு வேலை வழங்கிட வேண்டும், தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகளில் சுமார் 7.30 கோடி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் சுகாதாரப் பணியில் மிக மிக குறைந்த ஊதியத்தில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வரும் உள்ளாட்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை தமிழ்நாடு  அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி முதன் முறையாக  மீஞ்சூரில்  மாநில மாநாடு நடை பெற உள்ளதை வலியுறுத்தி  கும்மிடிப் பூண்டி, எல்லாபுரம், மீஞ்சூர், சோழவரம், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்டு மாவட்ட முழுவதும் கடந்த இரண்டு வாரங்க ளாக பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல்,   செயலாளர் ஏ.ஜி.கண்ணன்,  துணை நிர்வாகி கள் குமரவேல், பழனி உட்பட்ட பலர் கலந்து  கொண்டனர்.