districts

திருவள்ளூரில் மின்சாரம் சிறப்பு முகாம்

திருவள்ளூர், ஜன 1 - விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான பெயர், முகவரி சரிபார்க்கும் முகாம்  திங்களன்று (ஜன.3) திருவள்ளூரில் நடைபெற உள்ளது. தமிழக அரசு அறி வித்துள்ள ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட பெரியபாளையம் ஊத்துக் கோட்டை, கன்னிகைப்பேர், இராமஞ்சேரி, பூண்டி, புல்ல ரம்பாக்கம், மெய்யூர், எறையூர், வெள்ளாட்டுக் கோட்டை, பாலவாக் கம், போந்தவாக்கம், மாம்பாக்கம், பென்னாலூர் பேட்டை, ஆத்துப்பாக்கம், தண்டலம், முக்கரம்பாக்கம், செங்கரை,ஏனாம்பாக்கம், அத்திவாக்கம், பண்டிகாவ னூர்,  மஞ்சங்காரணை, கொப்பூர், பாப்பரம்பாக்கம், சேலை, ஏகட்டுர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து இலவச விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள னர். இந்த பகுதி விவசாயி களுக்கு மின் இணைப்பு  வழங்குவது தொடர்பாக திருவள்ளூர் செயற்பொறி யாளர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடை பெறுகிறது.  இதில் விவசாயி கள் கலந்துகொண்டு பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்து விரைந்து இலவச மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம்.