காஞ்சிபுரம் மாவட்டம் அப்பல்லோ டயர் தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சிக்கு தேர்தல் நிதியாக ஒருலட்சத்து 62 ஆயிரத்து 250 ரூபாயை வழங்கியுள்ளனர். இதனை சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமாரிடம் அப்போலோ டயர் சங்கத்தின் தலைவர் மணிகன்டன, கமல் ஆகியோர் வழங்கினர். மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் பி.ரமேஷ் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.