திருத்தணி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் திங்களன்று(செப்19) போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருத்தணி டி.எஸ்.பி.விக்னேஷ் மாணவிகளுக்கு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை விளக்கிக் கூறினார். காவல் ஆய்வாளர் ஏழுமலை,பள்ளி தலைமை ஆசிரியை அமுதா (பொ),பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரவேலு,ஆசிரியர்கள் சுப்பிரமணி,வெங்கடைய்யா,பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வர்ராவ் உள்பட மாணவிகள் இதில் கலந்துகொண்டனர்.