அம்பத்தூர், ஏப்.8- திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத் தூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட 79, 80 மற்றும் 81 ஆகிய வட்டங்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் தொகுதி பொறுப் பாளர் செல்வராஜ், சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, சிபிஎம் தொகுதி பொறுப் பாளர் சு.லெனின் சுந்தர், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், காங்கிரஸ் நிர்வாகிகள் எச்.பீர்முகமது, மகேந்திரன், மதிமுக நிர்வாகிகள் தாமோதரன், ஜெ.சிக்கந்தர், விசிக நிர்வாகிகள் தேவஞான முதல்வன், இப்ராஹிம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி கட்சியினர் கலந்து கொண்ட னர்.