ராணிப்பேட்டை, மே. 4 - ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (வ. 35) இருசக்கர வாகனத்தில் அவர் பணியாற்றும் ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறு வனத்திற்கு வெள்ளியன்று (மே 3) பணிக்கு செல்லும் போது காஞ்சி புரம் வெள்ளை கேட் அருகே ராஜ குளம் என்னும் இடத்தில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்பு பேரி காட்டில் மோதி தலை யில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இவருக்கு மனைவி வினோதினி, 2 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். தகவல் அறிந்த காஞ்சி புரம் டவுன் போலீசார் சட லத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குடும்பத்தார் ஒப்புதலோடு இரண்டு கண்கள் தானமாக பெற்றனர்.