districts

சென்னை முக்கிய செய்திகள்

வரதட்சணை வழக்கில் தேடப்பட்டவர்  துபாய் தப்பமுயன்றபோது கைது

சென்னை, மார்ச் 28- கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (34). இவர் மீது கடந்த சில  நாட்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை, மிரட்டுதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது.  இந்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக் குப் பதிவு செய்து, விசா ரணைக்காக தேடி வந்தனர். ஆனால், பிரேம்குமார் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்  வெளிநாட்டிற்கு தப்பி  ஓடவும் திட்டம் தீட்டியுள்ள தாக நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத் திற்கு தகவல் கிடைத் துள்ளது. இதையடுத்து, நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், பிரேம் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித் தார். அதோடு, அனைத்து சர்வதேச விமான நிலை யங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து புதன்கிழமை (மார்ச் 27)   துபாய் செல்லும் ஏர் இந்தியா  பயணிகள் விமானம் புறப் படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத் தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே, பிரேம் குமார் அந்த விமானத்தில் துபாய் நாட்டிற்கு தப்பிச்  செல்வதற்காக வந்துள்ளார்.  அவருடைய பாஸ் போர்ட்டை குடியுரிமை அதி காரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்த போது, அவர்  தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது. இதையடுத்து பிரேம் குமாரை பிடித்து, குடி யுரிமை அலுவலக அறை ஒன்றில் பாதுகாப்புடன்  அடைத்து, அதோடு அவருடைய துபாய் பயணத் தையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும், இந்த தகவலை நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவ லின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய தனிப்படை போலீ சார், சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரேம்  குமாரை கைது செய்து, நெய்வேலிக்கு அழைத்துச் சென்றனர்.

10 லிட்டர் சிறுநீரை வெளியேற்றி இளைஞரை காப்பாற்றிய மருத்துவர்கள் 

சென்னை, மார்ச் 28- மிக அதிக அளவிலான சிறுநீர் தேக்கத் தால் (ஹைட்ரோனெப்ரோசிஸால்) அவதிப்பட்ட 30 வயதான ஆன் ஒருவர் நுண்துளை லாப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையால் காப்பாற்றப்பட்டார். சிறுநீர் தேக்கத்தால் வயிற்றில் அசாதாரண வீக்கத்துடன் உயிருக்கு அபாய கரமான நிலையில் 30  வயதிலான  ஒரு ஆண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கத்தில்  ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (ஏஐஏன்யு)  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிறு வயது முதல் வயிற்றில் அசௌகரியம் மற்றும்  கனத்த உணர்வு போன்ற அவதிகளுடன் இருந்து வந்த நோயாளியை ஆராய்ந்த மருத்துவர்கள் அவருடைய வலது சிறுநீரகம் வருட கணக்கில் சிறுநீர் தேக்கத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளதை கண்டறிந்தனர். அது  30 முதல் 40 சென்டிமீட்டர் அளவிலான  வீக்கமாக மாறி வயிற்றின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது.   அதனால் ஏற்படக்கூடிய அபாயகர மான சிக்கல்களை தடுக்க அவருக்கு தலைமை சிறுநீரக மருத்துவ ஆலோசகர்  டாக்டர் அருண் குமார் தலைமையிலான மருத்துவ குழு நுண்துளை லாப்ரோஸ் கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இதனால் சிறுநீரகத்தில் தேங்கி பல உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்த 10 லிட்டர் அளவிலான சிறுநீரை வெளியேற்றியதால் அந்தநபர்  அறுவை சிகிச்சைக்கு பிறகு விரைந்து  குணமடைந்தார். இதனால் நோயாளி வலியிலிருந்து விடுபட்டதோடு 10 கிலோ வரை உடல் எடை யும் குறைந்தது. அவர்   விரைவில் குணமாகி 2 நாட்களிலேயே மருத்துவமனையி லிருந்து வீடுதிரும்பினார் என்று டாக்டர் அருண் குமார் கூறினார்.

கிரிக்கெட் வீராங்கனை மந்தனா விளம்பர தூதராக நியமனம்

சென்னை, மார்ச் 28- நேச்சுரல்ஸ் சலூன் தனது சொந்த நிறுவனமான க்ரூம் இந்தியா நிறுவனத்தின் தோல் பராமரிப்பு தயாரிப்புகள் விளம்பரத்திற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.  இந்தியர்கள் இயற்கையான முறையில் உடல் அழகை  பேணிக்காத்திடும் வகையில் பாரம்பரியம் மாறாமல் நுகர்வோருக்கான நேரடி தோல் பராமரிப்பு தயாரிப்புகளை  வழங்குவதன் மூலம் அவர்களின் அனுபவத்தை மறுவரையறை செய்ய நேச்சுரல்ஸ் தயாராக உள்ளது  என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. உறுதி, நம்பிக்கையுடன்  பெண்களின் அடையாள சின்னமாக திகழும் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து இருப்பதன் மூலம் அது எங்களின்  தனித்துவமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று  நேச்சுரல்ஸ்  தலைமை செயல் அதிகாரி சிகே குமரவேல் கூறியுள்ளார்.

ஆவணமின்றி கொண்டு சென்ற  ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை, மார்ச் 28- நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்ப தால், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  முக்கியமாக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ஆவண மின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால்,  பறிமுதல் செய்யப்படுகிறது. அதேபோல் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் புதன்கிழமை இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த  வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன்  என்பபது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் ரூ.15 லட்ச ரூபாய் இருந்தது. குபேந்திரன் பழைய  வண்ணாரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருவதாக வும், சொந்தமாக இடம் வாங்குவதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்குரிய எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து 15 லட்ச  ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும் உரிய ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். மேலும்  பறிமுதல் செய்யப்பட்ட 15 லட்ச ரூபாயை தேர்தல் அதிகாரி கள் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குருப்-1 தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை, மார்ச் 28- அரசுத் துறையில் உயர் பதவிக்கான துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரிகள் உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய 90 பணியிடங்களை நிரப்பு வதற்கு போட்டித் தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 27-ந்தேதி  நள்ளிரவு வரை விண்ணப் பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு ஜூலை மாதம் 13 ஆம்  தேதி நடக்கிறது. முதல் நிலை  தேர்வு முடிவுகள் அறிவிக் கப்படும் போது முதன்மை தேர்வு நடைபெறும் நாள் வெளியிடப்படும்.

புதுச்சேரியில் 27 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு: 7 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

புதுச்சேரி, மார்ச் 28- புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. முக்கியக் கட்சிகளின் தரப்பில் தாக்கலான 3 மாற்று வேட்பாளர்கள், 4 சுயேட்சைகள் உட்பட 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நேற்று முடி வடைந்தது. ஒட்டுமொத்தமாக புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 34 வேட்பாளர்கள் 45 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி குலோந்துங்கன் தலைமையில் அதி காரிகள் மனுக்களை பரிசீலனை செய்த னர். இதில் பாஜக வேட்பாளர் நமச்சி வாயம், அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர் நேரடியாக பங்கேற்றனர். மற்ற கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள், சுயேச்சைகள் பங்கேற்றனர். வேட்புமனுக்கள் தனித் தனியாக பரிசீலனை செய்யப் பட்டது. இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.  7 வேட்பாளர்களின் 9 மனுக்கள் நிரா கரிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வரும் 30-ம் தேதி திரும்பப் பெறலாம். அன்று வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி யிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டி யல் வெளியிடப்படும்." என்று தெரி வித்தனர். நிராகரிக்கப்பட்ட மனுக்கள்  மனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, “அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகளான பாஜக, காங்கிரஸ், அதிமுக ஆகி யோரின் மனுக்கள் ஏற்கப்பட்டதை யடுத்து அவர்களின் மாற்று வேட்பாளர்கள் 3 பேர், சுயேச்சைகள் 4 பேர் என 7 பேர் தாக்கல் செய்த 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

சிதம்பரம்: திருமாவளவன் உள்ளிட்ட 11 பேர்  மனு ஏற்பு 

சிதம்பரம், மார். 28-  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக  மக்களவைத் தேர்தல்நடைபெறுகிறது.  இதனையொட்டி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளில் சிதம்பரம் தொகுதி யில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. அதனைத் தொடர்ந்து அரிய லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரிய லூர் மாவட்ட ஆட்சியருமான ஆணி மேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இதில் சுயேசையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளி யிடப்படுகிறது. அதற்கு முன்பு வேட்பாளர்கள் எண்ணிக்கை குறை யும் என்று கூறப்படுகிறது.

கடலூர் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு

கடலூர், மார்ச் 29- கடலூர் மக்களவை தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட உட்பட 19  பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதியுள்ள 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ கத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி நடை பெறுகிறது. கடந்த 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளார். வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தனர். மக்களவை  தொகுதியில் போட்டி யிட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் ,அதிமுக கூட்ட ணியில் தேமுதிக வேட்பாளர் சிவக் கொழுந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகம், மற்றும் சுயேச்சை கள் உட்பட 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலை யில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதான கட்சிகளான காங்கி ரஸ், பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உட்பட 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதே போல மாற்று வேட்பாளர்கள் மற்றும் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உட்பட 8 மனுக்கள்  என மொத்தம் 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

 

;